ரயிலுடன் மோதி லொறி விபத்து : பெண் உயிரிழப்பு : மற்றுமொருவர் காயம்!!

4

புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்