வவுனியாவிற்கு விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் அடங்கிய குழு!!

686

மூன்று நாள் பயணமாக வடபகுதிக்கு வந்துள்ள பிரித்தானிய தூதுவர் ஜோன் ரங்கின் அடங்கிய குழுவினர் நேற்று புதன்கிழமை வவுனியாவுக்கு வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது அவர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும் அவரது அலுவலகத்தில் சந்தித்து வன்னி பகுதி நிலைவரங்களைக் கேட்டறிந்தனர்.

இதன்போது காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தான் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கினுக்கு தெரியப்படுத்தினார் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

அத்துடன் முல்லைத்தீவு வெலிஓயா, மன்னார் முசலி, கொக்கச்சான்குளம் எனும் கலாபோவஸ்வெவ, செட்டிக்குளம், ஓமந்தை இறம்பைக்குளம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் ஏனைய பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றம், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் குறித்தும் எடுத்து விளக்கினோம் எனவும் அவர் தெரிவித்தார்.

தம்மால் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் குறித்து பிரித்தானிய தூதர் குழுவினர் விவரமாகக் கேட்டறிந்தனர் என்றும் தன்னால் இயன்றவரை குறித்த விடயங்களை முதன்மைப்படுத்தி ஆவன செய்வார் என்று தூதுவர் தன்னிடம் உநுதியளித்தார் என்றும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனும் கலந்துகொண்டனர்.

 

11 12 13 14 15