முல்லைத்தீவு நாயாற்று பாலம் கீழிறங்கியதில் முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!!

21

முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதனால் கடல் நீர்மட்டமானது உயர்வடைந்த நிலையில் முல்லைத்தீவு கொக்குளாய் திருகோணமலை பிரதான வீதியான செம்மலை பகுதியில் உள்ள நாயாற்றுபாலம் முற்றாக கீழிறங்கியுள்ளது.

முற்றாக தடை

இதனால் கொக்குளாய், கொக்குதொடுவாய், கர்நாட்டுக்கேணி திருகோணமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.