1900 பேரின் உயிரை பறித்த எபோலா வைரஸ்!!

598

ebola

உயிர்கொல்லி வைரசான எபோலாவுக்கு இதுவரையிலும் 1900 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே ஆட்டிப் படைத்து வருகிறது எபோலா. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது.

இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறுகையில், ஆபிரிக்க நாடுகளில் எபோலா அதிக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தற்போது நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்த நோயை முற்றிலும் ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலியாகி உள்ளனர். 3, 500 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கினியா, சியாரா லியோன், லைபீரியா பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது

நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நோய் கட்டுப்பாட்டு நிபுணர்களை கொண்ட ஆலோசனை கூட்டம் விரைவில் ஜெனீவாவில் நடைபெற உள்ளது. இதில் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்