
கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

இதன்போது, சிறுவன் நன்றாக உடையணிந்து, காலணிகள் அணிந்திருப்பதைக் கண்டு சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உணவு மற்றும் பானங்களை வழங்கி, அவன் இருக்கும் இடம் குறித்து விசாரித்துள்ளனர்.
எனினும் சிறுவன் சரியாக பதிலளிக்காததால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





