விதியை மீறி மேலாடையுடன் கோவிலுக்குள் சென்ற கமல் : கடும் அதிருப்தியில் மக்கள்!!

551

நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாங்குநேரியில் ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் மடாதிபதியை நெற்றியில் விபூதியுடன் சென்று கமல் சந்தித்தார்.

அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

K1 K2 K3 K4