மேலும் உயர்கிறது பலி : எண்ணிக்கை 480ஐ எட்டுகிறது!!

157

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காணாமல் போனோரின் எண்ணிக்கை 356 என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, கண்டி மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேர் காணாமல் போயுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காணாமல் போயுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காணாமல் போயுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், மொனராகலை, மாத்தளை, கொழும்பு, மட்டக்களப்பு, அநுராதபுரம், முல்லைத்தீவு, அம்பாறை, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, இரத்தினபுரி, காலி, மன்னார், கம்பஹா மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, அனர்த்தங்களின் ஊடாக 971 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 40,358 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.