மக்களுக்கான பல கோடி ரூபா பெறுமதியான காணியை வழங்கும் கொடையாளி!!

33

இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள காணியை நபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஜாஎல பகுதிக்கு அருகில் உள்ள தனது நிலத்தை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி என ஷியாம் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

தனது 4 கோடி ரூபாய் பெறுமதியான 24 பேர்ச் காணியை மக்கள் தங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளார்.

வாழ்வதற்கு வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு இந்த காணியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுத் தொகுதியை அமைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவான மக்களை அதில் தங்க வைக்க முடியும் என ஷியாம் டயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வாறான உதவிகளை செய்யாவிடின், அது அந்த மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்தப் பகுதியில் ஒரு பேர்ச் காணி 23 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்ய முடியும். அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதனை மக்களுக்கு வழங்க வேண்டும்.

மிகவும் வருமானம் குறைந்த மக்களுக்கு இதனை வழங்க வேண்டும். அந்த மக்களை இங்கே குடியேற்ற முடிந்தால், அது எனக்கு ஒரு நிம்மதியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.