வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 146வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

1574

வவுனியா இலுப்பையடி பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவுச்சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஆறுமுகநாவலரின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அவர் தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றது.

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.