
ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதியின் 5 வயது மகனான சாய்சரணுக்கு நேற்றிரவு நடந்த சம்பவம் குடும்பத்தினரை மட்டுமல்ல அப்பகுதியினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டில் இருந்தபோது பெற்றோர்கள் வாழைப்பழம் சாப்பிடக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். அதைக் கண்ட பெற்றோர் பதற்றத்துடன் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த வாழைப்பழத்தை மருத்துவர் குழு அகற்றி, உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திடீர் விபத்தால் உயிரிழந்த சாய்சரணின் மரணம், பெற்றோரை மட்டுமல்ல, அப்பகுதி மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.





