
பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நபர் ஒருவரினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
லண்டனிலுள்ள உணவகம் ஒன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த 32 வயதான ஜெயந்தன் இராமச்சந்திரன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 25 வயதான Dequarn Williams என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில், சில மணித்தியாலங்களில் சந்தேக நபரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் திருமணம் செய்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





