வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

386

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (08) பிற்பகல் 11.00 மணி முதல் நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.