அமெரிக்காவில் தீ விபத்தில் மேலும் ஓா் இந்திய மாணவி உயிரிழப்பு!!

19

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஆல்பனியில் உள்ள வீட்டில் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இந்தியர்கள் இருவரில்,

மேலும் ஒரு இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

நியூயார்க் மாகாணம் ஆல்பனியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த முதுநிலை மாணவி சஹஜா ரெட்டி உடுமலா மற்றும் மற்றொரு இந்தியரான அன்வேஷ் சரபெள்ளி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

இதில், ஆல்பனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சஹஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேல்சிகிச்சைக்காக வெஸ்ட்செஸ்டர் தீக்காய சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்ட அன்வேஷ் சரபெள்ளி, சனிக்கிழமை (டிசம்பர் 7) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

அன்வேஷின் இறப்புக்கு நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காகத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.