அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலை!!

286

Sucide

தற்கொலைகள் அதிகம் இடம்பெறும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

172 உலக நாடுகளைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிகம் தற்கொலைகள் இடம்பெறும் நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது.

தர வரிசை அடிப்படையில் கயானா முதல் இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 44.2 சதவீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள வட கொரியாவில் ஒவ்வொரு 100,000 பேரிலும் 38.5 சதவீதமானோரும் மூன்றாம் இடத்தில் உள்ள தென் கொரியாவில் 28.9 சதவீதமானோரும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நான்காம் இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு 100,000 பேரிலும் 28.8 சதவீதமானோர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் லித்துவேனியா(28.2), சுரினாம்(27.8), மொசாம்பிக்(27.4), நேபாளம்(24.9), தன்சானியா(24.9), புரூண்டி(23.1), இந்தியா(21.1) மற்றும் தென் சூடான்(19.8) ஆகிய நாடுகள் உள்ளன.