நுவரெலியாவுக்கு இரவில் செல்ல வேண்டாம்!!

21

நுவரெலியாவுக்குச் செல்லும் எந்தவொரு வீதியிலும் இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று (11.12.2025) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகிந்துல பகுதியிலிருந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. நிலவும் வானிலை காரணமாக வீதிகளில் மேலும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் ‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் உட்பட தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சிலர் கூறும் சில அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.