தமிழர் பகுதியில் அதிகாலையில் நேர்ந்த விபத்து : குடைசாய்ந்த கப்ரக வாகனம்!!

21

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை கோழிகளை ஏற்றிவந்த கப் ரக வாகனம், மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோழிகளை ஏற்றிக்கொண்டு கல்முனை சாலை வழியே கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு கோழிகளை ஏற்றிவந்த வாகனத்தில் பயணித்தோரும் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.