40 நிமிடங்கள் முன்பாக அலுவலகம் சென்ற பெண் பணி நீக்கம்!!

30

ஸ்பெயினில் பலமுறை அலுவலகத்துக்கு வேலை நேரத்துக்கு 40 நிமிடங்கள் முன்பாக சென்ற பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலை 7.30 வேலைக்கு 6.45 அல்லது 7 மணிக்கே வருவதை அந்த பெண் வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் 19 முறை முன்கூட்டியே வந்தது ஒழுங்கு மீறல் எனக்கூறியும், அவர் தொடர்ந்து வந்ததால் மேலதிகாரி பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றில் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.