நான் மட்டுமல்ல இன்னும் நிறைய நடிகைகள் விபச்சாரத்தில் உள்ளனர் : ஸ்வேதா பரபரப்புத் தகவல்!!

779

Swetha_Basu

பல நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று சமீபத்தில் விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. அவர் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான மக்தீ இந்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்றவர். வளர்ந்த பிறகு தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

ரா ரா படம் மூலம் கொலிவுட் வந்தவர் கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 31ம் திகதி ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது பொலிசாரிடம் ஸ்வேதா கையும், களவுமாக சிக்கினார். அவருடன் சில தொழில் அதிபர்களும் சிக்கினர்.

இந்நிலையில் இது குறித்து ஸ்வேதா கூறுகையில், நிதி நெருக்கடியால் தவித்த என்னை விபச்சாரம் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சிலர் ஆசை காட்டினர்.

வேறு வழி இல்லாமல் தான் இந்த தொழிலுக்கு வந்தேன். நான் மட்டுமா இப்படி விபச்சாரத்திற்கு வந்தேன். என்னை போன்று பல ஹீரோயின்களும் இந்த தொழிலுக்கு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.