30 லட்ச ரூபாய் வேலையை விட்ட பெண் கூறும் காரணம்!!

41

சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் ஆண்டொன்றிற்கு 30 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துவந்துள்ளார். ஆனால், தான் அந்த வேலையை விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார் அவர்.

என்ன காரணம்?

இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், கல்வி கற்று, ஒரு நல்ல வேலை கிடைத்து, சொந்தமாக ஒரு வீடு கட்டி, திருமணமும் செய்து வாழ்ந்துவந்த நிலையிலும், ஏதோ வாழ்க்கையில் மிஸ் ஆவதை உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார் அந்தப் பெண்.

பயணம் செய்தல் மலையேறுதல் போன்ற விடயங்களில் ஆர்வம் கொண்ட அவர், வார இறுதிகளில் அத்தகைய விடயங்களில் ஈடுபட்டாலும், மற்ற நாட்களில் தினமும் காலை முதல் மாலை வரை ஒரே வேலையைச் செய்தாக வேண்டியுள்ளதே என்னும் ரீதியில் யோசிக்கத் துவங்கியுள்ளார்.

ஆகவே, தனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தொடர்வதற்காக, தனது முழு நேர வேலையை விட்டுவிட்டதாகத் தெரிவிக்கும் அவர், ஐந்து ஆண்டுகள் ஆனாலும் வேலை கிடைக்கும், ஆனால், அப்போது இதே இளமையும் சக்தியும் இருக்குமா என கேள்வி எழுப்புகிறார்.

தனக்குப் பிடித்ததைச் செய்ய, தனக்காக வாழ முடிவெடுத்த அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.