
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் 25000 ரூபா நிவாரணத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குறிப்பாக முற்றாக அழிவடைந்த வீடுகள், பகுதியளவில் அழிவடைந்த வீடுகள் , வெள்ளத்தினால் சிறியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் 25,000 நிவாரணம் வழங்கின்றது.
அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர்கள் பிரிவிலுள்ள பாதிக்கப்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1550 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் 25,000 ரூபாவினை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளமையுடன் அவற்றில் தற்போது 850குடும்பங்களுக்கு 25,000 ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவற்றினுள் தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 381 குடும்பங்களுக்கு மேற்பட்டவர்களுக்கே அதிகளவில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளமையுடன் பண்டாரிக்குளம் கிராமத்தினை சேர்ந்த 85 குடும்பத்தினரும், வவுனியா நகரம் வடக்கு பகுதியினை சேர்ந்த 77க்கு மேற்பட்டவர்களுக்கும் என வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 42 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1550 குடும்பத்தினர் இந்த நிதியினை பெற தகுதி பெற்றுள்ளனர்.
இது வரை 850 குடும்பங்களுக்கு 2கோடியே 12லட்சத்தி 50000 ரூபாய் நிதி தற்போது வழங்கப்பட்டுள்ளமையுடன் மிகுதி குடும்பத்தினர்களுக்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.





