வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஆரம்பம்!!

668

இலங்கை தமிழரசுக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் முன்னோடியாக இன்று (05.09) மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

64 வருட வரலாற்றை கொண்ட தமிழரசுக்கட்சியின் 15 தேசிய மாநாட்டின் மத்திய செயற்குழு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் உறுப்பினர்கள் 48 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தேசிய மாநாடு மற்றும் தமிழரசுக்கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

-நன்றி குளோபல் தமிழ்-

v1 v2