5வது போட்டியில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி : தொடரை 3-1 என கைப்பற்றியது இந்திய அணி!!

433

Ind

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹெடிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் டோனி களத்தடுப்பை தெரிவு செய்யதார். இதனையடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிர்ச்சி அளித்தனர்.

இங்கிலாந்து அணியின் முன்னிலை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரூட், குக் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். இங்கிலாந்து அணி சார்பாக ரூட் அடித்த 113 ஓட்டங்களுடன் அவ்வணி 294 ஓட்ட எண்ணிக்கை பெற்றது.

295 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில் 253 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது. கடைசிவரை போராடிய ஜடேஜா 87 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒருநாள் தொடரில் அனைத்து போட்டியிலும் தோல்வி கண்ட இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

இந்தத் தொடரில் ஏற்கனவே மூன்று தொடர் வெற்றியை பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜோ ரூட்டும் தொடரின் சிறப்பாட்டக்காரராக சுரேஷ் ரைனாவும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.