2013ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியாகின!!

688

Z Score

2013ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணைய தளத்திலும் 1919 என்ற அரச தகவல்களை அறிந்துகொள்ளும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

2013ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியர் தங்களது இசட் புள்ளிகள் அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகங்களையும் பாடக் கற்கை நெறிகளையும் தெரிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.