தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜா, செயலாளராக துரைராஜசிங்கம் தெரிவு!!

577

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய, ஏகமனதாக மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார். இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனே தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

இந்த தலைமைத்துவ மற்றும் கட்சியின் பொறுப்பு மாற்றங்கள் குறித்து அறிவிப்பு நாளை நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்கப்படவுள்ளது.

1 2 3 4 5