அதீத வேகத்தால் விபரீதம் : பரிதாபமாக பலியான 17 வயது இளைஞன்!!

127

களுத்துறை – பதுரலிய, அகலவத்த திரிவனகெட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அகலவத்தையிலிருந்து பதுரலிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி எதிர்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பதுரலிய பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.