
வவுனியா வீரபுரம் பகுதியில் இன்று (21.12.2025) மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் உட்பட சிலர் இன்று மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் சாவடைந்துள்ளார். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த யோ.அபிசாந் வயது 19 என்ற இளைஞரே சாவடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





