
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி நடவடிக்கைகள் தை மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுடபவியலாளர் (Computer Application Assistant, Information and Communication Technology Technician), நீர்க்குழாய் பொருத்துநர் (Plumber), சிகையலங்காரவினைஞர் (Hair Dresser), கணினி பட வரைஞர்(Graphic Designer),
ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பவியலாளர்(Dress Maker/Tailor), மோட்டார் வண்டி திருத்துனர்(Motorcycle Technician), மர கைவினைஞர்(Wood Craftsman), மின்னியலாளர்(Electrician) ஆகிய பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறைகளில் தமது திறன்களை வளர்த்துக்கொள்ள ஆர்வமுடைய மாணவர்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ள Google படிவத்தை நிரப்பி எமது நிலையங்களுடாக தொழிற்பயிற்சியினை பெற்றுக்கொள்ள முடியும். https://forms.gle/4BRWFAnLEqsXLZxA9
மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள தொடர்பு இலக்கங்கள் மூலம் எம்மை தொடர்வு கொள்ளவும்.
0242221617, 0768304770, 0770720157, 0710318982





