
வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகரசபை நேற்று முன்னெடுத்திருந்தது.
நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களை கட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களிற்கு முன்பாக நடைபாதையை தடை செய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், விபத்துக்களும் ஏற்படும் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் கொட்டகைகள் மற்றும் பொருட்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மாநகர ஆணையாளரின் உத்தரவுக்கமைய வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், உட்பட உத்தியோகத்தர்கள் இச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.






