
35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் போது 1500 மீற்றர் ஒட்டப் போட்டியில் தங்கப்பதத்தினையும் , 800மீற்றர் ஒட்டப்போட்டில் வெள்ளிப்பதக்கத்தினையும் வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.

தியாகம மகிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இவ் விளையாட்டு விழாவில் 1500 மீற்றர் ஒட்டப்போட்டியில் நான்கு நிமிடம் 2.63 செக்கனில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தினையும் 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் ஒரு நிமிடம் 56.90 செக்கனில் ஒடி முடித்து வெள்ளிப்பதக்கினையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வருட வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போதும் 1500 மீற்றர் , 800 மீற்றர் ஆகிய ஒட்டப் போட்டிகளில் பழைய சாதனையினை முறியடித்து புதிய சாதனையினை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






