விமான ஓடுபாதையில் நிர்வாணமாய் ஓடிய பயணியால் பரபரப்பு!!

589

Flight

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ரன்வேயில் நிர்வாணமாய் ஓடி பிரித்தானிய பயணி ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டி3 ஓய்வறையில் தனது இணைப்பு விமானத்திற்காக மது அருந்திய படி பயணி ஒருவர் காத்திருந்துள்ளார். அப்போது தீவிபத்திற்கான அலாரத்தை அவர் அழுத்தியதையடுத்து அங்கிருந்த அவசர நுழைவாயில் உடனடியாக திறந்தது.

இதைப் பயன்படுத்தி ஓடுபாதைக்கு புகுந்து ஓடிய அவர், அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்த மற்றொரு விமானத்திற்குள் நுழைய முயன்றுள்ளார். இந்நிலையில் அவர் தனது சட்டையையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக ஓடியதாக கூறப்படுகிறது.

எனினும் அவர் மீது அதிகாரிகள் வழக்கு ஏதும் பதியவில்லை என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் போதை தெளிந்ததும் அவரை விமானத்தில் அனுப்பி வைத்தனர்.