
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனிடையே, விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அந்த வகையில், கொழும்பு பொருளாதார மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டவிலும் போஞ்சி உட்பட பல வகையான மரக்கறிகளின் விலைகள் இன்று (27.12.2025) அதிகரித்துள்ளன.
இதற்கமைய, சில இடங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 1,400க்கு விற்கப்பட்டுள்ளதுடன்,பச்சை மிளகாயின் விலை ரூ. 1,500ஐத் தாண்டியுள்ளது.
மத்திய வங்கியின் தினசரி விலை அறிக்கையில் தக்காளியின் விலையும் ரூ. 500ஐத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.





