அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம்!!

276

அமெரிக்காவில் பியர் விளம்பரத்திற்காக ஓர் நகரம் அமைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல பியர் தயாரிப்பு நிறுவனம் அன்ஹியூசர் புஷ் (Anhuser Bush) தனது நிறுவனத் தயாரிப்பு பியர் ளை விளம்பரம் செய்ய நினைத்து, அதற்காக க்ரெஸ்டட் பட் நகரத்தைத் தெரிவு செய்தது. அங்கு இந்த‌ வார இறுதியில் பியர் விளம்பரக் காட்சி தயாரிக்க உள்ளனர்.

இந்த விளம்பரத்தை காட்சிப்படுத்துவதற்காக, இந்நகர நிர்வாகத்துக்கு 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் (7.5 கோடி) கட்டணமாக வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகத்துக்கும், நிறுவனத்துக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் ரகசியமாக நடந்துள்ளது.

விளம்பரத்திற்கு ஏற்றாற் போல ஆங்காங்கே செட்களும் போடப்பட்டுள்ளன. தவிர, க்ரெஸ்டட் பட் (Crushded but) எனும் பெயர் விளம்பரத்துக்காக வாட் எவர் யு.எஸ்.ஏ (What ever USA) என்று மாற்றப்பட இருக்கிறது.

விளம்பரத்திற்காக வெளி நகரங்களில் இருந்து சுமார் 1,000 இளைஞர்களை இந்நகரத்துக்கு வரவழைத்துள்ளது , இதன் மூலம் இந்நகரத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், வருமானம் வளரும் என்று நிர்வாகம் சாக்குப்போக்குகள் சொன்னாலும், இந்த விளம்பர ஒப்பந்தம் கேவலமானது என்று நகர மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

B1 B2