இலங்கையில் 4லட்சத்தை நோக்கி நகரும் தங்கத்தின் விலை!!

233

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 342,200 ரூபாவாக பதிவாகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.

அதன்படி, இன்றையதினம் (29.12.2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.