துருவப் பகுதியில்வேகமாக உருகும் பனிப்பாறைகளால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

393

Ice

அண்டார்டிகா துருவப் பகுதியில் பனிப் பாறைகள் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பனி சூழ்ந்த அண்டார்டிகா துருவப் பகுதியில் புவி வெப்பம் அதிகரிப்பதன் விளைவாக பனிப்பாறைகள் உடைந்ததுடன், வேகமாக உருகி வருகின்றது. இதனால் அப்பகுதியில் கடல் நீர் மட்டம் 6 செ.மீ உயர்ந்துள்ளது, இது சராசரியை விட 2 செ.மீ அதிகமாகும்.

இதுகுறித்து சவுத்தாம்ப்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த கிரெக் ராய் கூறுகையில், 10 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவில், செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை பார்க்கும் போது, கடல் மட்டத்தின் வேகமான உயர்வு கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.