அதிகாலை இடம்பெற்ற விபத்து : இறுதிச்சடங்கு சென்று வீடு திரும்பிய 6 பேர் வைத்தியசாலையில்!!

461

இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில், திரிவனகெட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (31.12.2025) காலை, வான் மற்றும் லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது வானில் இருந்த ஐந்து பேரும் லொறியின் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானில் பயணித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வான் மீது லொறி மோதி பிரதான வீதியின் நடுவில் கவிழ்ந்ததால், ஒரு வழிப்பாதை போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

மேலும் வானில் இருந்தவர்கள் மொனராகலை பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தங்கள் சொந்த ஊரான இரத்தினபுரிக்கு திரும்பிக்கொண்டிருந்த போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

இவ்வாறு விபத்திற்குள்ளான லொறி கொழும்பிலிருந்து பெல்மடுலவுக்கு பயணித்த போது விபத்தில் சிக்கியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வானைச் செலுத்தி வந்த சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இரத்தினபுரி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.