இலங்கையில் மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை : வருட இறுதியில் மகிழ்ச்சி!!

341

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (31) சற்று குறைந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,000 ரூபாவாக விற்பனையாகியிருந்த நிலையில், வருடத்தின் இறுதி நாளான இன்று (31) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

அந்த வகையில்,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அதற்கமைய, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,163 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.