
உதயநிதி சமீபத்தில் தான் நயன்தாரா சர்ச்சையில் இருந்து வெளியே வந்தார். தற்போது காஜல் அகர்வால் மூலம் வேறு ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
ஆனால் இந்த முறை பணம் விஷயத்தில் தான் காஜலிடம் லொக் ஆகியுள்ளார் உதயநிதி. நண்பேண்டா படத்தில் முதலில் நடிக்க காஜல் அகர்வாலிடம் தான் பேச்சு வார்த்தை நடந்துள்ளது, அதற்காக 40 லட்சம் அட்வான்ஸும் தந்துள்ளார். பின் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, நயன்தாராவை ஒப்பந்தம் செய்தது படக்குழு.
சரி அவரால் தான் நடிக்க முடியவில்லையே, கொடுத்த பணத்தையாவது திருப்பி கேட்போம் என்று போய் நின்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.பணத்தை கேட்டால் என்ன அர்த்தம் அதற்கு பதிலாக உங்கள் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து அதை தீர்த்து விடுகிறேன் என்று அவர் கூற, உதயநிதி கோபத்தின் உச்சிக்கு சென்று, நடிகர் சங்கத்தில் காஜல் மீது புகார் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.





