
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அமெரிக்கப் பெண்ணொருவரை கேரள முறைப்படி திருமணம் செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் அமெரிக்காவில் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வாசுதேவனும், அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் கஸாஸ் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, கேரள முறைப்படி காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
மணமகளின் பெற்றோர் அமெரிக்காவில் இருந்து வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.





