கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நடந்த பயங்கரம் : பெண்கள் உட்பட கும்பல் வெறியாட்டம்!!

310

கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் 3 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் பணப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் மோதர பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.