2.5 கோடி சம்பளம் : மாணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய வேலை!!

347

இந்திய தொழில்நுட்பக் கழகம், ஹைதராபாத் (IIT Hyderabad) தனது வரலாற்றில் மிகப்பெரிய வேலை வாய்ப்பை பதிவு செய்துள்ளது.

கணினி அறிவியல் பிரிவில் இறுதியாண்டு B.Tech படிக்கும் மாணவரான 21 வயதான எட்வர்ட் நாதன் வர்கீஸ், நெதர்லாந்தில் அமைந்துள்ள Optiver என்ற டிரேடிங் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக (Software Engineer) ஆண்டுக்கு ரூ.2.5 கோடி சம்பளத்துடன் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இது IIT Hyderabad நிறுவப்பட்ட 2008 முதல் கிடைத்த அதிகபட்ச சம்பளம் கொண்ட வேலை வாய்ப்பாகும். இதற்கு முன்பு 2017-ல் சுமார் ரூ.1 கோடி சம்பளம் மிகப்பெரியதாகக் கருதப்பட்டது.

சமீப காலங்களில் 60-90 லட்சம் ரூபாய் சம்பள வாய்ப்புகள் கூட அசாதாரணமாகக் கருதப்பட்டன.

வர்கீஸ், Optiver நிறுவனத்தில் இரண்டு மாத Internship செய்தார். Internship காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால், Pre-Placement Offer (PPO) வழங்கப்பட்டது.

Internship-க்கு IIT Hyderabad-இல் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், முழுநேர வேலை வாய்ப்பு கிடைத்தது இவர் ஒருவருக்கே.

“இது நான் சந்தித்த முதல் மற்றும் ஒரே Interview. என் Mentor, Offer வழங்கப்படும் எனச் சொன்னபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். என் பெற்றோர்களும் அதேபோல் மகிழ்ந்தனர்” என வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Competitive Programming-இல் நாட்டம், இந்திய அளவில் Top 100 இடம் பெற்றது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இந்த சாதனை, IIT Hyderabad-இன் சர்வதேச வேலை வாய்ப்பு திறனை வெளிப்படுத்துகிறது. மேலும், உலகளாவிய நிறுவனங்கள் இந்திய மாணவர்களின் திறனை அதிகம் மதிப்பிடுகின்றன என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.