
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மருமகளை மாமியார் கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கிறிஸ்துவமேரி என்ற பெண்ணின் மகனை நந்தினி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
இது கிறிஸ்துவமேரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருமகளை கொலை செய்ய மூன்று மாதங்களாக திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் நந்தினியை தலையில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் அவரது தலையை ஒரு இடத்தில் புதைத்துள்ளார். அத்துடன் நந்தினியின் மற்ற உடல் பாகங்களை மற்றொரு இடத்திலும் புதைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் கொலை நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர். தடயவியல் நிபுணர்களுடன் பொலிஸார் அங்கு ஆய்வு செய்வதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





