வவுனியா தம்பனைச்சோலை வீதிக்கு பிரதேசசபை உறுப்பினர் பிரசாத் அவர்களினால் தெரு விளக்குகள்!!

371

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரசாத் அவர்களின் முயற்சியால் வவுனியா சாந்தசோலை- தம்பனைச்சோலை வீதிகளுக்கான தெரு விளக்குகள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது வேண்டுகோளுக்கு இணங்க தெரு விளக்குகள் பொருத்தப்பட்ட போதும் விசமிகளால் அவ் விளக்குகள் அனைத்தும் சேதமாக்கப்பட்டன.

தொடர்ந்து பிரதேசவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் நேற்று முன்தினம் (05.09) பிரசாத் அவர்களின் முயற்சியால் தெரு விளக்குகள் அனைத்தும் மீண்டும் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 2 3