
அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ வைத்த 43 வயது நபரும் அவரது 13 வயது மகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய 36 வயது மனைவி, 15 வயது மகள், 20 வயது மகன் மற்றும் 66 வயது பாட்டி ஆகியோர் அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை வீட்டிற்கு தீ வைத்தபோது இரண்டு மகள்கள், மனைவி மற்றும் மனைவியின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டு மகன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தனது தாய் மற்றும் சகோதரிகளை மீட்க முயன்றபோது, 20 வயது மகனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

தீ வைத்த நபர் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியைத் தாக்கி வந்துள்ளார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டதுடன், இரு தரப்பினரும் எச்சரிக்கப்பட்டனர் எனவும் தெரியவந்தது.





