வெள்ளவத்தையில் உணவகம் ஒன்றுக்கு சென்ற தமிழ் குடும்பத்திற்கு அதிர்ச்சி!!

350

கொழும்பு, வெள்ளவத்தையில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் சாப்பிடச் சென்றவர்கள் அதிர்ச்சி அடையும் சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. குறித்த உணவகத்தில் வழங்கிய உழுந்து வடை ஒன்றுக்குள் முழுமையான கராப்பான் பூச்சி ஒன்றை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதனை சாப்பிட முற்பட்ட வேளையில், அதனை கண்ட பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், கடையின் நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.