
பாலத்தை கடக்க முயன்ற வேன் ஒன்று எதிராக வந்த பேருந்தில் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
புத்தளம் – அனுராதபுரம் வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கல்லாறு பகுதியில் பாலம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன நிலையில் இதற்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒடுங்கிய பாலத்திலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





