
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டி20 போட்டி நேற்று பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக மோர்கன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களைக் குவித்தார். இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
181 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்படி மூன்று ஓட்டங்களால் தோல்வியை தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 66 ஓட்டங்களைப் பெற்றார்.
71 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் ஈயோன் மோர்கன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இத் தோல்வியின் மூலம் 131 புள்ளிகளுடன் டி20 தரவரிசையில் இலங்கை அணியுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்ட இந்திய அணி 5 புள்ளிகளை இழந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இலங்கை அணி தொடர்ந்து 131 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றது.





