
’பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ எனகுறிப்பிடப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா , 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற முக்கிய உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்ததாக நம்பப்படுகிறது.
பாபா வங்கா 1996-ஆம் ஆண்டு 85 வயதில் இறந்தபோதிலும், அவரது தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து ஒரு மர்மத்தின் ஆதாரமாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது, நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி , பாபா வங்கா 2026-ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்றும், மனிதகுலம் வேற்று கிரகவாசிகளை முதன்முதலில் சந்திக்கும் என்றும் கணித்ததாகக் கூறப்படுகிறது.
“மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளும், இது ஒருவேளை உலகளாவிய நெருக்கடி அல்லது பேரழிவுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் எச்சரித்திருந்தார்.

சிலர் இதை, கடந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வந்த 3I/ATLAS என்ற மர்மமான பொருளின் கண்டுபிடிப்புடன் தொடர்புபடுத்துகின்றனர்.
சீனா தைவான் மீது தொடர்ந்து இராணுவ அழுத்தத்தைக் கொடுப்பது மற்றும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், மூன்றாம் உலகப் போர் குறித்த பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டு தொடங்கும் என்று பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் கூறினாலும், அது மனிதகுலத்தை அழித்துவிடும் என்பது சாத்தியமில்லை.
அவரது முந்தைய கணிப்புகள், மனிதகுலத்தின் வீழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கியது என்றும், உலகம் அதிகாரப்பூர்வமாக 5079-ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் கூறின.
2025-ஆம் ஆண்டில், பாபா வங்காவின் கணிப்புகளில், மனிதகுலத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்துடன், பேரழிவு தரும் நிலநடுக்கங்கள், ஐரோப்பாவில் ஒரு போர் மற்றும் ஒரு உலகளாவிய பொருளாதாரப் பேரழிவு ஆகியவை அடங்கும்.

பாபா வங்காவின் கணிப்புகளைத் தவிர, 1500-களில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸின் (Michel de Nostredame) தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.
இவர் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சிக்கு வருதல், செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற நவீன காலத்தின் சில முக்கிய தருணங்களைக் கணித்தவர்.
நாஸ்ட்ராடாமஸின் தெளிவற்ற எழுத்துக்களின்படி, இந்த ஆண்டு ஒரு முக்கிய ஆளுமை படுகொலை செய்யப்படுவதையோ அல்லது ஒரு அரசியல் ஆட்சியை உலுக்கக்கூடிய அரசியல் சதியையோ காணக்கூடும்.
அதோடு அவரது எழுத்துக்களில் உள்ள மற்றொரு செய்யுள், இந்த ஆண்டு ஏழு மாத கால பெரும் போர் ஒன்று வரவிருப்பதாக எச்சரித்த்துள்ளது.





