அம்பாறையில் பேட்டுக் கோழி கூவும் அதிசயம்!!

822

Joanne Mudhar's broody hen

சேவல் கூவி பொழுது விடியும் என்பார்கள், பெட்டைக் கோழி கூவி விடியாது என்றும் சொல்லுவார்கள். அம்பாறையில் முட்டையிட்டு அடைகாக்கும் பேட்டுக் கோழி சிறகடித்து கூவி பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறையில் விளினயடி வீதியில் வசித்துவரும் கபீர் என்பவரது வீட்டிலேயே இந்த அதிசய நிகழ்வு இடம் பெறுகிறது . தற்சமயம் அந்தப் பேட்டுக் கோழி அடைகாத்துக் கொண்டிருக்கிறதாம். உணவுக்காக எழுந்து வரும்போதெல்லாம் சேவல் கூவுவது போன்று அந்தக் கோழியும் சிறகடித்து கூவிக் கொள்கிறதாம்.