
மொனராகல, தனமல்வில – வெல்லவாய வீதியில் நிறுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன், மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தனமல்வில-வெல்லவாய வீதியில் தேநீர் அருந்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அருகில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த எதிலிவெவ வெஹெரய பகுதியைச் சேர்ந்த 23 வயதான நதுன் தீக்ஷன ஹேரத் என்ற இளைஞன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





