பூமியை தாக்கிய ராட்சத விண்கல்லால் பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்!!

452

Stone

லத்தீன் அமெரிக்க நாடுகளிலேயே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நிகாராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரை இன்று ராட்சத விண்கல் ஒன்று தாக்கியது.

அங்குள்ள விமான நிலையத்தை அண்மிய வனப்பகுதியில் தீப்பிழம்பாக விழுந்த இந்த விண்கல், சுமார் 39 அடி குறுக்களவு கொண்ட மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. அது விழுந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

விண்கல் விழுந்த ஓசையும் அதிர்வும் மனாகுவா முழுவதும் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தை அளவீடு செய்யும் கருவியிலும் அதன் தாக்கம் பதிவானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விண்கல் விழுந்த போது பலத்த அதிர்வும், அது விழுந்த ஓசை ஏற்படுத்திய அதிர்ச்சியில் அடுத்ததாக மிகப்பெரிய அதிர்வும் உணரப்பட்டதாகவும், அருகாமையில் விமான நிலையத்தில் இருந்த விமானங்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.